Thala Fans

Thala Fans : வெள்ளத்தில் பாதித்த இலங்கை மக்களுகாக அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல்கள் தற்போது தெரிய வந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ரசிகர் என்றால் படம் ரிலீஸின் போது கட் அவுட், பேனர், பாலபிஷேகம் என்று மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்கள் வறுமையில் வாடும் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் ஒரு சில பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தல ரசிகர்கள் அப்பகுதி மக்களுக்காக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Fans Ajith Fans

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.