viswasam
viswasam

தல அஜித் இன்று அதிகாலை விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க மறுத்துள்ளார். அதன் பின்னர் அவரே அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இன்று அதிகாலையில் ரசிகர்கள் சிலர் ஏர்போர்ட்டில் அஜித்தை பார்த்துள்ளனர்.

ரசிகர்களை பார்த்த அஜித் புன்சிரிப்புடன் காரில் இருந்து இறங்கியுள்ளார். அதன் பின்னர் தானியங்கி படிக்கட்டில் அவருடைய பெட்டி மாட்டி கொண்டுள்ளது.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ஓடி சென்று உதவ முயன்ற பொது சிரியப்புடன் இட்ஸ் ஓகே என பதிலளித்து அவரே பெட்டியை எடுத்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுக்க கேட்டுள்ளனர். ஆனால் தல அஜித் பிளைட்டிற்கு நேரமாகி விட்டது என நகர்ந்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் அவரே அழைத்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

https://platform.twitter.com/widgets.js