தல அஜித் பொதுவாக எந்தவொரு திரையுல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். இதனால் அவரை எப்போதாவது ரசிகர்கள் வெளியே பார்த்தால் உடனே அவருடன் புகைப்படம், வீடியோ எடுத்து கொள்ள முயற்சி செய்வது வாடிக்கையாகி விட்டது.

சமீபத்தில் தல அஜித் பள்ளி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பார்த்த ஆசிரியர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைப்பட்டு கேமராவை ஆன் செய்துள்ளனர்.

இதனை பார்த்த அஜித் இது பள்ளி, பள்ளிக்குள் மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது.

கேமராவை ஆப் செய்யுங்க, நான் சொல்லி அனுப்புறேன் அப்போது போட்டோ எடுத்து கொள்ளலாம் என மிகவும் பணிவாக கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் எங்க தல. தன்னால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இருக்க கூடாது என நினைப்பவர் என கூறி அஜித்தை பாராட்டி வருகின்றனர்.