
Ajith & Vijay Sethupathi Combo : தலயுடன் நடிங்க என ரசிகர்கள் ஆரவாரம் செய்ததற்கு விஜய் சேதுபதி அளித்துள்ள பதில் அரங்கையே அதிர செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித், அஜித்திற்கு எந்தவித கெட்டப்பாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தி விடும்.
அதே போல் தான் விஜய் சேதுபதியும்.. அவருக்கும் எந்தவித கெட்டப்பாக இருந்தாலும் செமையாக செட்டாகி விடுகிறது. குறிப்பாக வில்லன், டான் என அனைத்தும் பக்காவாக பொருந்துகிறது.
அப்படியிருக்க தல அஜித்தும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும்? நிச்சயம் செம் மாஸாக தான் இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.
சமீபத்தில் விஜய் சேதுபதி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் தலயுடன் சேர்ந்து நடி தல என ஆரவாரம் செய்துள்ளனர்.
அதற்கு விஜய் சேதுபதியும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார். தல மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களும் இந்த நாளிற்காக தான் நாங்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறி வருகின்றனர்.