Thala Ajith Video

Thala Ajith Video : தல அஜித் அவர்கள் ஸ்மார்ட்டான லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்கள் வெளியாகி இருந்தன.

சில வாரங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்ஸ் முடிவடைந்து இருந்தன. அதன் பிறகு தல அஜித் குடும்பத்துடன் கோவா சென்றிருந்தார்.

தற்போது கோவா டூரை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார். அந்த வீடியோ ஒன்று ரசிகர் ஒருவரால் பகிரப்பட்ட தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.