Ajith Murugadoss Movie

Ajith Murugadoss Movie : தல அஜித்துடன் நிச்சயம் விரைவில் படம் பண்ணுவேன், ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார் முருகதாஸ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்துடன் இணைந்து இயக்கி இருந்த படம் தீனா. இந்த படத்தை அடுத்து முருகதாஸ் மீண்டும் அஜித்துடன் இணையவில்லை.

ரசிகர்கள் பலரும் மீண்டும் அஜித்துடன் எப்போது இணைவீர்கள்? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது முருகதாஸ் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது எனக்கும் அஜித்துக்கும் இடையே கேப் அதிகம் விழுந்து விட்டது. என்னுடைய நலம் விரும்பிய பலரும் அஜித்துடன் எப்போது படம் என கேட்கிறார்கள்.

நானும் யார் மூலமாவதோ அல்லது அஜித் மூலமாகவோ வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். அப்படி வந்தால் நிச்சயம் அஜித்துடன் இணைவேன். ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார்.

முருகதாஸின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிர்கர்கள் பலரும் அந்த நாளுக்காக தான் நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறி வருகின்றனர்.