Thala Ajith & Gaja Relief

Thala Ajith & Gaja Relief :

கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து அஜித் சொன்ன விசியம் வெளியாகி வைரலாகி வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

அப்போது தல அஜித் கோவா சென்று விட்டதால் பலரின் வசை பாடலுக்கு ஆளாகி இருந்தார். அதன் பின்னர் தல அஜித் தன்னுடைய உதவியாளரை அழைத்து ரூ 15 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி விடுமாறு கொடுத்துள்ளார்.

அதற்கு அஜித்தின் நண்பர்கள் இதை நீயே முதல்வரிடம் நேரடியாக கொடுத்து விடலாமே, அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம் என கூறியுள்ளார்.

இதற்கு தல அஜித் இந்த விசயங்களில் எல்லாம் விளம்பரம் தேட கூடாது, பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்ந்தால் போதும் என கூறியுள்ளார்.

அந்த பின்னர் தான் அந்த காசோலை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இது தான் எங்க தல என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here