Thala Ajith Comment on Priyamudan Movie
Thala Ajith Comment on Priyamudan Movie

விஜய்யின் அந்த படத்தில் நான் நடித்திருக்கணும் ஆனால் மிஸ் பண்ணிட்டேன் என இயக்குனரிடம் வருத்தப்பட்டு கூறியுள்ளார் அஜித்.

Thala Ajith Comment on Priyamudan Movie : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருவார்கள் அஜித், விஜய். அஜித் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் உச்சமடைந்தனர்.

அதேபோல் தளபதி விஜய் தன்னுடைய அப்பாவின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர்.

இவர்கள் இருவரும் ஒருவர் நடிக்க இருந்த படத்தை மிஸ் செய்து மற்றொருவர் நடித்து ஹிட் கொடுப்பது உண்டு. அப்படி தளபதி விஜய் தன்னுடைய பெற்றோர்கள் வேண்டாம் என கூறியும் இந்த படத்தில் நிச்சயம் நடித்தே தீருவேன் என்று அடம் பிடித்து நடித்த திரைப்படம் தான் பிரியமுடன்.

வின்சென்ட் செல்வா இயக்கிய இந்த படத்தில் விஜய் நெகட்டிவ் ரோலில் நடித்து இருப்பார். இந்த படம் இப்போதைக்கு வேண்டாம் இது உன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என விஜய்யின் பெற்றோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் இப்படத்தின் கதை தளபதி விஜய்க்கு பிடித்து விட்டதால் நான் நடிக்க தீருவேன் என்று அடம்பிடித்து நடித்தார். அவரின் ஆசைப்படியே படம் சூப்பர் ஹிட் அடித்தது. விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவர் மீது யாருக்கும்வெறுப்பை ஏற்படுத்தவில்லை மாறாக நல்ல ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தந்தது.

இப்படத்தின் இயக்குனர் செல்வா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் இந்த படத்தை பார்த்துவிட்டு இது நான் நடித்திருக்க வேண்டிய படம் என வருத்தப்பட்டு கூறியதாக பேசியுள்ளார்.

மேலும் இந்த படம் உருவான சமயத்தில் அஜித் வாலி என்ற திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.