![Sarkar Vs Thala Sarkar Vs Thala](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/11/Sarkar-Vs-Thala-696x383.jpg)
Thala Vs Sarkar : தல அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் தான் கெத்து, சர்கார் ஒன்னும் லாபம் இல்லை என பிரபல விநியோகிஸ்தர் இல்லை என கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சர்கார். இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
ஆனால் இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ 250 கோடியை நெருங்கி விட்டது என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது செங்கல்பட்டு பகுதியில் இப்படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் பல அதிர்ச்சி தகவல்களை பதிவு செய்துள்ளார்.
செங்கல்பட்டு ரைட்ஸை ரூ 18 கோடிக்கு வாங்கினேன். ஆனால் இதுவரை படம் ரூ 10 கோடி தான் வசூல் செய்துள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி எல்லாம் போக ரூ 6 கோடி தான் கையில் நிற்கும் என கூறியுள்ளார்.
தல அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் தான் சீரான வசூலை கொடுக்கின்றன. சர்க்கார் முதல் மூன்று நாள் நல்ல வசூல் இருந்தது.
அதன் பின்னர் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைந்து விட்டது, பெரிய அளவில் கூட்டமும் இல்லை வசூலும் இல்லை என கூறியுள்ளார்.