தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவல் விஸ்வாசம் அப்டேட் இல்லை என்றாலும் ரசிகர்களை உற்சாகத்துடன் கொண்டாட வைத்துள்ளது.

அது என்ன விஷயம் என்றால் தல அஜித் ஆலோசனையுடன் சென்னையில் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் தற்போது ஆஸ்திரேலியாவில் பரிசு பெற்றுள்ளது.

இதன் மூலம் தன்னுடைய விஞ்ஞான திறமையை உலகிற்கே உணர்த்தியுள்ளார் தல அஜித். இதனால் தல ரசிகர்களின் கொண்டாட்டமும் உச்சத்தை தொட்டுள்ளது.