Thala 61 Producer Details
Thala 61 Producer Details

தல 61 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து அதன் தயாரிப்பு நிறுவனம் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.

Thala 61 Producer Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்குகிறார். தல அஜித் வலிமை படத்தை தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இந்த நிலையில் தல அஜித் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவரிடம் ஒரு கதையை கேட்டு ஸ்கிரிப்டை தயார் செய்யுமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

யார் யாரிடம் பேசுவது? சூரரைப் போற்று Release குறித்து Vijay பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

இதனையடுத்து தற்போது தல 61 படத்தை தளபதி விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இயக்குனர் சுதா கொங்கரா, தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என அனைத்தும் அஜித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து உச்சத்தை தொட்டு கொண்டே வருகிறது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கின்றனர்.