Thala 60 :
Thala 60 :

Thala 60 : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
அண்மையில் அஜித்தை ஜிப்ரான் சந்தித்து பேசியதும் இதற்காகத்தானாம்.

வினோத்தும் ஜிப்ரானும் இணைந்து ஏற்கனவே தீரன் படத்தில் பணியாற்றியிருக்கும் நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் அஜித் படத்தில் இணையவுள்ளனர்.

இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.