Thala 59 Video

Thala 59 Video :

நானும் தல ரசிகன் தான்.. தல 59 படத்தில் நானும் நடிக்கிறேன் என போலீஸ் அதிகாரி ஒருவர் பேசியுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் விஸ்வாசம் படத்தை அடுத்து தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது.

இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதே போல பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களும் நடிக்க AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களும் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது போலீஸ் அதிகாரி ஒருவர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் நானும் தல ரசிகன் தான். தல 59 படத்தில் நடிக்க உள்ளேன்.

சூர்யா படம் ஒன்றிலும் நடிக்க உள்ளேன். ஆனால் முதல் முதலாக அஜித்துடன் நடிப்பது தான் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.