AK 59

Thala 59 Heroines : தல 59 படத்தில் நடிக்க உள்ள மூன்று நாயகிகள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நஸ்ரியா, சாரதா ஸ்ரீநாத், கல்யாணி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தது.

ஆனால் தற்போது இது குறித்த உண்மையான அப்டேட்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி எல்லாம் நடிக்கவில்லை.

டாப்சீ வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க கீர்த்தி குலஹரி வேடத்தில் அபிராமி வெங்கடாசலம் நடிக்கிறார்.

மேலும் மற்றொரு பெண்ணாக ஹிந்தியில் நடித்த ஆண்ட்ரியா ட்ராயிங் அவர்களே நடிக்க உள்ளார்.

மேலும் வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க இருப்பதும் உறுதியாகியுள்ளது. மற்ற இரண்டு வில்லன்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க தல அஜித் அபிதாப் பச்சன் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.