
தல59 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தை அடுத்து தல அஜித் தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அமிதாப்பச்சன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி இருந்த பிங்க் படத்தின் ரி-மேக்காக உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகியாக நஸ்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வைரலாகி வருகின்றன. பிங்க் படத்தின் நாயகியாக டாப்ஸீ பண்ணு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.