
மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது தாய்க்கிழவி பாடல்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாத்தி திரைப்படம் வெளியாகி அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றிருந்த தாய்க்கிழவி பாடல் யூடிபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக தனுஷ் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.