Test Rankings
Test Rankings

Test Rankings – ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தரவரிசையில் இதுவரை தாங்கள் எட்டாத இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டெஸ்ட்,நியூசிலாந்து-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதன்படி, கோலி 14 புள்ளிகள் பெற்று மொத்தம் 934புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

இந்தியா டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்ய ரஹானே இரு இடங்கள் ஏற்றம் கண்டு 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ரிஷப் பந்த் 11 இடங்க்கள் முன்னேறி 48-ஆவது இடத்துக்கு முதல் முறையாக வந்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் முறையாக 28-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். சக வீரர் முகமது ஷமி, 2இடங்கள் முன்னேறி 24-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்களில்,உஸ்மான் கவாஜா ஓரிடம் முன்னேறி 12-ஆவது இடத்துக்கு வர, கேப்டன் டிம் பெய்ன் 9இடங்க்கள் ஏற்றம் கண்டு 46-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

டிராவிஸ் ஹெட்16 இடங்கள் ஏறி 63-ஆவது இடத்தை அடைய,பந்த்துவீச்சாளர் நாதன் லயன் 7-ஆவது இடம் பிடித்துள்ளார்.

சக வீரர்களான ஜோஷ் ஜோஸில்வுட்2 இடங்கள் முன்னேறி 9-ஆவது இடத்துக்கும்,மிட்செல் ஸ்‌டார்க் ஓரிடம் முன்னேறி 15-ஆவது இடத்துக்கும் வந்துள்ளார்.