
நடிகை டாப்ஸி தனது நண்பர்களுடன் சம்மர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை டாப்ஸி வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று அவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் என்ட்ரியான 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை சமீபத்தில் அவர் கொண்டாடினார். அத்துடன் அவர் தனது பாலிவுட் நண்பர்களுடன் இணைந்து நீச்சல் குளத்தில் சம்மர் கொண்டாட்டத்தை கொண்டாடிய புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். கலர்ஃபுல் பிகினி உடையில் தோழிகளுடன் டாப்ஸி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை டாப்ஸி தற்போது ’ஜன கன மன’ ’அலையன்ஸ்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும், மூன்று ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் அவை அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

