நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் டாப்ஸி பண்ணு. இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழியில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது முழுக்க முழுக்க இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் டாப்ஸி பண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் இவர் முன்னாள் பேட்மிட்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு வெகு விரைவில் உதய்பூரில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றன.