Tapsee Blast Producers

நடிகர்கள் கேட்டார் சம்பளத்தை தூக்கி கொடுக்கறீங்க நாங்க கேட்டா என்ன தப்பு எதற்கு விமர்சனம் செய்கிறீர்கள் என டாப்ஸி விளாசியுள்ளார்.

Tapsee Blast Producers : தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் மிக பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து செம ஹிட் கொடுத்து வருகிறார். இதனால் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி வருகிறார். நயன்தாராவை விட டாப்சி அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டு வருகிறது.

ஜே.பி.நட்டாவுடன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன் சந்திப்பு

ஆனால் நடிகைகள் அதிக சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர்கள் விமர்சனம் செய்வதாகவும் நடிகர்கள் கேட்டால் பெரிய தொகையை தூக்கி கொடுக்கிறீர்கள் நாங்கள் கேட்டால் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என விளாசியுள்ளார்.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet | HD

என்னோட திரையுலகில் அறிமுகமான நடிகர்கள் இன்று என்ன விட மூன்று மடங்கு அதிகமான சம்பளம் வாங்குகின்றனர். நடிகைகள் சம்பளத்தை அதிகமாக கேட்டால் அவர்கள் சர்ச்சைக்குரியவர்கள், சிக்கலான அவர்கள் என முத்திரை குத்தி விடுகிறார்கள் என பேசியுள்ளார்.