Taminadu & Gaja Cylone

Taminadu & Gaja Cylone : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு-ல் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “வானிலை மையத்தின் அறிவுறுத்தலின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை தருவார்கள்.

புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

மின்துண்டிப்புகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் இயக்கப்படும்.

இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பதிப்புகள் குறித்து யாராலும் கண்டறிய முடியாது. ஆனால், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கஜா புயலின் பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் புயல் பாதித்த இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க, நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” . மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.