Tamil Thalaivas team fail again
Tamil Thalaivas team fail again

Tamil Thalaivas team fail again – புரோ கபடி லீக் பூட்டியில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதினர். இதில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. மோதம் 12 அணிகள் பங்குபெறும் இப்போட்டி இரு பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றது.

இதன் தொடர்சியாக நேற்றைய முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் பெங்கால் அணியும் மோதினர்.

தமிழ் தலைவாஸ் வெற்றியை நோக்கி மட்டுமே ஆட்டத்தை தொடங்கியது. அதே போல் பெங்கால் அணியும் சிறப்பாக விளையாடியது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தங்களில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 15-15 என்ற புள்ளிகள் எடுத்து சம நிலையில் இருந்தது.

தொடர்ந்து விளையாடிய இரு அணி வீரர்களும் சரிக்கு சமமாக விளையாடி வந்தனர்.

இறுதியில் பெங்கால் அணி 27-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வெற்றி பெற்றது.