Tamil Rockers Vs 2 Point O

Tamil Rockers Vs 2 Point O :

விரைவில் 2 பாயிண்ட் ஓ படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ட்வீட் செய்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் 2 பாயிண்ட் ஓ.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 29-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

லைகா நிறுவனம் சுமார் ரூ 650 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் 2 பாயிண்ட் ஓ படத்தை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என சவால் விட்டிருப்பது படக்குழுவினரையும் திரையுலகினரையும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான சர்கார் படத்தையும் சவால் விட்டபடியே முதல் நாளே இணையத்தில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.