2023 தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் 3 பெரிய தமிழ் படங்கள் மோத இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் குறிப்பாக தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களையும் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் குறி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆமாம் அஜித் நடிப்பில் உருவாகும் ஏகே 62, சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யா 42 மற்றும் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.

இந்த மூன்று படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.