Viswasam Update

தமிழ் சினிமாவில் வெளியாகி வரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் அதே சமயம் ரசிகர்களுக்கு இடையேயான போட்டிகளுக்கும் பஞ்சம் இருக்காது.

எந்தவொரு விசயமாக இருந்தாலும் இரண்டு படங்களை ஒப்பிட்டு நாங்க தான் டாப் என சொல்லி கொள்வதில் ரசிகர்களுக்கு அப்படியொரு ஆனந்தம்.

தற்போது அப்படியான போட்டி தான் சர்கார், விஸ்வாசம், NGK, பேட்ட போன்ற படங்களுக்கு இடையே நடந்து வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியில் இதுவரை அதிக விலைக்கு விற்பனையான டாப் 5 படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் சர்கார் முதலிடத்தையும் விவேகம் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் விஸ்வாசம் படம் 4-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

  • சர்கார்- ரூ. 15 கோடி
  • கபாலி, மெர்சல்- ரூ. 14 கோடி
  • லிங்கா- ரூ. 13.6 கோடி
  • காலா, விஸ்வாசம்- ரூ. 12 கோடி
  • விவேகம்- ரூ. 11.2 கோடி