நடிகை தமன்னா ரசிகர்களுக்கு நடுவே மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்மையாக டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கிய இவர் பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் சோலோ நாயகியாக படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

இந்நிலையில் இவர் மெட்டா கிரியேட்டர்ஸ் டே என்ற பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்காக நடைபெற்ற கெட் டு கெதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ரசிகர்களுக்கு நடுவே செம்மையாக டான்ஸ் ஆட இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.