Sushma Nair in Zee Tamil Serial

சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Sushma Nair in Zee Tamil Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஷ்மா நாயர். இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional | Trending | Tamil News HD

திருவண்ணாமலையில், 19-ந்தேதி மகாதீப தரிசனம் : பக்தர்களுக்கு அனுமதி?

தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியஸான என்றென்றும் புன்னகை சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு என்றென்றும் புன்னகை சீரியலில் ஸ்ரீநிதி நடித்து வந்த நிலா என்ற கதாபாத்திரத்தில் இனி தான் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு தொடர்ந்து ஆதரவு தருமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலோடு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.