நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்திற்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார். மேலும் திருமணத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத காரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் எப்பொழுதும் தனது ரசிகர்களிடம் நெருங்கி பழகுவதுண்டு. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணம் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில், நடிகர் சூர்யா ரசிகருக்கும் அவரது மனைவிக்கும் போன் போட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் தான் வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்றும் அடுத்த மாதம் வந்து நேரில் சந்திக்கிறேன் என போனில் மணமக்களிடம் பேசியிருக்கிறார். மேலும் ஒருத்தரை ஒருத்தர் மனசை புரிஞ்சிக்கிட்டு வாழணும், எந்த நேரத்திலும் பேசி எல்லாத்தையும் சமாளிக்கலாம் என வாழணும் என சூர்யா வாழ்த்துடன் சேர்த்து அட்வைஸும் கொடுத்திருந்தார்.

இப்படி ரசிகர்களிடம் அன்போடும் அக்கறையோடும் நடந்து கொள்ளும் சூர்யாவை கண்டு அனைத்து ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் இதுபோன்று ஏற்கனவே நடிகர் சூர்யா அவரது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரில் சென்று கலந்து கொண்டிருந்த திருமண புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.