நடிகர் சூர்யா சிம்புவின் வெந்து துணிந்தது காடு திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு சிம்பு பதில் அளித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்று அதிகாலை 5 மணிக்கு வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், வெந்து தணிந்தது காடு படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இப்படத்தை பார்க்க தான் ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரீ-ட்வீட் செய்துள்ள சிம்பு, ‘மிக்க நன்றி அண்ணா இது எனக்கு மிகப்பெரிய விஷயம்’ என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்து இருக்கிறார். இவர்களது இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.