Suriya Says About Ajith
Suriya Says About Ajith

அஜித் விட்ட வாய்ப்பால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன் என்று பேசியுள்ளார் டாப் ஹீரோ ஒருவர்.

Suriya Says About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரைப் பற்றி பேசாத நடிகர்களே இல்லை. நடிகர் சூர்யாவும் இவரைப்பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

இங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகமானார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய பில்லா 2 திரைப்படத்தின் வசூல் என்ன? இந்த படத்தால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா? – இதோ முழு விவரம்

விஜய் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் முதலில் அஜித் தான் நடித்திருந்தார். பின்னர் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவர் படத்திலிருந்து விலகிக் கொள்ள சூர்யா இப்படத்தில் ஒப்பந்தமானார்.

இது குறித்து சூர்யா நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது நேருக்கு நேர் படத்தின் மூலமாகத்தான் நான் சினிமாவிற்குள் வந்தேன். முதலில் இந்த படத்தில் அஜித் தான் நடித்தார். அவர் விலகவே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.