பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார் என தெரிய வந்தது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சிவக்குமாரின் மகனா இவர் நேருக்கு நேர் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் பல தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்து இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூர்யா.. ஆனால்?? வெளியானது சூப்பர் தகவல்

நடிகர், தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் பல ஏழை எளிய மக்களின் கல்வி கனவை நனவாக்கி வருகிறார். எதற்கும் துணிந்தவன் படத்தை துணிந்து விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் ஆர் சி 15 படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூர்யா.. ஆனால்?? வெளியானது சூப்பர் தகவல்

இந்த படத்தில் சூர்யாவின் காட்சிகள் 10 நிமிடங்கள் இடம் பெறும் என சொல்லப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் விரைவில் சங்கர் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.