பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ் பவர் தான் சூர்யா. இவர் தற்போது வணங்கான் வாடிவாசல் போன்ற படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்ப படங்களை தொடர்ந்து சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க இருக்கும் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படம் குறித்த பல சுவாரசியமான விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருவதை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், என்ன ஒரு காட்சி!, இயக்குனர் மணி சார், பல பிரபலங்களின் கனவை நினைவாக்கியுள்ளார். இப்படம் கர்ஜிக்கும் பிளாக்பஸ்டராக வெற்றி பெற, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.