Suriya and Hari :
Suriya and Hari :

Suriya and Hari :

சூர்யாவின் கேரியரில் மறக்க முடியாத ஒரு படம் சிங்கம். வாரணம் ஆயிரம், அயன் என ஏ சென்டரில் கலக்கிக்கொண்டிருந்த சூர்யாவை சி சென்டரில் கர்ஜிக்க வைத்த படம் சிங்கம்.

இந்த படம் மட்டுமல்லாமல் ஆறு, வேல் என சூர்யா – ஹரி கூட்டணி இணைந்த எல்லா படங்களுமே மினிமம் கியாரண்டி படங்கள்தான்.

இதனால் கூடிய விரைவிலேயே இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணையபோவதாக சொல்லப்பட்டது.

ஆனால் இடையில் என்ன ஆனதோ இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.

இதனால் இந்த கூட்டணி தற்போது பிரிந்துவிட்டதாகவும் சூர்யாவுக்கு பதிலாக ஜெயம் ரவி படத்தை இயக்க ஹரி தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இது சிங்கம் நான்காம் பாகமாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இதை ஜெயம் ரவி தரப்பினர் மறுத்துள்ளனர்.

ஜெயம்ரவி – ஹரி கூட்டணி இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால் அது சிங்கம் படமாக இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.