சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட்ல டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் தொடர்பான அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சூர்யா 42 திரைப்படம் இதுவரை 50% நிறைவடைந்து இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.