சூர்யா 42 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் என்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூரியா 42 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா..?? இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்

படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன. மற்றும் பத்து மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆமாம் அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் தொடர்ந்து வந்த “வி” சென்டிமென்ட் இந்த படத்திலும் தொடர இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்திற்கு வீர் என டைட்டில் வைக்க பட குழு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா..?? இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்

விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.