Suriya 37

Suriya 37 : சூர்யா நடித்து வரும் கே.வி.ஆனந்த் படமான Suriya37 ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தமிழகத்தை போலவே ஆந்திர பிரதேச மாநிலத்தை தன்னுடைய கோட்டையாகவே வைத்து கொண்டுள்ளார்.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்குடன் ஜோடி சேர்ந்து NGK படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன் லால், ஆர்யா, சாயீஷா ஆகியோருடன் இணைந்து பெயரிடப்படாத சூர்யா 37 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் பலரும் செல்வராகவனிடம் NGK அப்டேட் கேட்டு நச்சரித்து வரும் வேளையில் சூர்யா 37 படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்றால் இன்று சூர்யா 37 படத்தின் இயக்குனர் கே.வி,ஆனந்த் அவர்களுக்கு பிறந்த நாள் என்பது தான்.

ரசிகர்கள் பலரும் கே.வி.ஆனந்த் பிறந்த நாளிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இன்று சூர்யா 37 படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya 37

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here