பீஸ்ட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடல் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Super Update About Beast First Single Track : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்க வில்லனாக செல்வராகவன், டான்ஸிங் ரோஸ் மற்றும் பிரபல நடிகர் ஒருவர் நடித்து வருகிறார்.

நான் முழு கதையும் கேட்கவே இல்ல – Interview With Actress Divya Bharathi & Bachelor Movie Team

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. இவர் ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு டி என்ற பாடலை எழுதினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் படத்தில் ஓ பேபி பாடலை எழுதியிருந்தார்.

மீண்டும் பழைய பார்முடன் ரஹானே- புஜாரா : கோச்சர் தகவல்

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் இவர் எழுதியுள்ள பாடல் 90’s Kids என தொடங்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. அஸ்த சிங்கள் ட்ராக் ஆக வெளியாக உள்ள இந்தப் பாடல் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.