Ratchasan

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தை பார்த்து விட்டு போன் செய்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் நல்ல படங்களை பாராட்டி படக்குழுவினர்களை ஊக்குவித்து வருபவர் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.

அதேபோல் தற்போது இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை பார்த்து விட்டு போன் செய்து பாராட்டியுள்ளார்.

ரஜினி பாராட்டியதால் உச்சகட்ட மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார் விஷ்ணு விஷால். அதே போல் இயக்குனர் ராம் குமாரும் தனக்கு ரஜினி போன் செய்து வாழ்த்தியதாக டீவீட்டியுள்ளார்.

இவர்களின் டீவீட்டை பார்த்த ரசிகர்கள் இது தான் எங்க தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பெருமையுடன் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.