ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Web Ads

ரஜினி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

super star rajinikanth upcoming movie director
super star rajinikanth upcoming movie director

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வெளியாகி 500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக யாரு இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது பிரபாஸ் வைத்து கல்கி 2898 ஏடி படத்தை இயக்கிய நாக் அஷ்வின் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறியதாகவும் அவருக்கு கதை பிடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

super star rajinikanth upcoming movie director
super star rajinikanth upcoming movie director