ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் மோகன்லால் இணைந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால் என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைப்பில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.