Super Deluxe :
Super Deluxe :

Super Deluxe : தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தைரியமான கதை, வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்ரி. இப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேசிய அவர்,

இப்படத்திற்காக தன்னை முதல்முறையாக சந்தித்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா,

இதில் ஒரு சின்ன கதாபாத்திரம் தான்.. பிடிக்கவில்லை என்றால் என் மூஞ்சியில் காரித் துப்பி விட்டு செல்லுங்கள்.. நான் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டேன் என வெளியாக கூறினார்.

அவர் அப்படி பேசினாலும் அவர் படத்தில் நடிக்கிறேன் என்ற இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே எனக்கு சில நிமிடங்கள் ஆனது.

என சூப்பர் டீலக்ஸ் படத்தில் தான் இணைந்து கொண்ட சுவாரஸ்ய கதையை காயத்ரி கூறியுள்ளார்.

Thiagarajan Kumararaj
Thiagarajan Kumararaj
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.