சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலால் பாண்டவர் இல்லம் சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு நேரம் வரை இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வரும் திங்கள் ( ஜூன் 26 ) முதல் புது வசந்தம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. செம்பருத்தி, அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ஷாம் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த சீரியல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற குழப்பம் ரசிகர்கள்
ஆனால் முடிவுக்கு வருவது தாலாட்டு சீரியல் தான், இதனால் வரும் திங்கள் முதல் பாண்டவர் இல்லம் சீரியல் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.