மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சுமோ என்ற திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sumo Movie Release Update : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மிர்ச்சி சிவா. காமெடி கலந்த படங்களில் நாயகனாக நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான தமிழ் படம் 1 மற்றும் 2 இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மூடப்பட்ட திரையரங்குகள்.. நேரடியாக OTT-யில் வெளியாகும் சிவாவின் திரைப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவரது நடிப்பில் அடுத்ததாக மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதில் ஒன்று தான் சுமோ. இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டார் இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மீது மூடப்பட்டு இருப்பதன் காரணமாகவே இப்படியான முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோசிமின் அவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மூடப்பட்ட திரையரங்குகள்.. நேரடியாக OTT-யில் வெளியாகும் சிவாவின் திரைப்படம் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு