
Watch Full VIdeo : – Sulthan Trailer குறித்து வெளியான Mass அப்டேட்! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Karthi Fans Food Center : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் இளைய மகனான இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி.

கார்த்தியின் சகோதரரான சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் அகரம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மக்களின் கல்விக்கு உதவி வருகிறார். அதேபோல் நடிகர் கார்த்தி உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு உதவி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க கார்த்தியின் ரசிகர் மன்றம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் அதாவது ரூபாய் பத்துக்கு ஒருவேளை உணவு கிடைக்கும் வகையில் மக்கள் நல பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.