பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற சுஜா வருணியின் கரு கலைந்து விட்டதாக சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அமீர் பாவணி மற்றும் சுஜா வருணி சிவகுமார் ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிபி ஜோடி நிகழ்ச்சியால் டைட்டில் வென்ற சுஜா வருணிக்கு நடந்த அபார்ஷன்‌.. வெளியான அதிர்ச்சி தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கையோடு சிவகுமார் மற்றும் சுஜா வருணி அளித்த பேட்டி ஒன்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு முறை சுஜா தவறி கீழே விழுந்துவிட்டார். அப்போது அவருக்கே தெரியாமல் யூரின் போய்விட்டார். பிறகு டாக்டரிடம் பரிசோதனை செய்ய இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. ரொம்ப சந்தோஷப்பட்டோம். பிறகு மருத்துவமனை ஆலோசனைப்படி இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தோம்.

பிபி ஜோடி நிகழ்ச்சியால் டைட்டில் வென்ற சுஜா வருணிக்கு நடந்த அபார்ஷன்‌.. வெளியான அதிர்ச்சி தகவல்

திடீரென ஒரு நாள் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடக்க பிறகு டாக்டரிடம் பரிசோதனை செய்த போது கரு கலைந்து விட்டதாக கூறினார். உடைந்து போய்விட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.