ரஜினி நடிப்பில் முழுமையான காதல் படம்: சுதா கொங்கரா ஆர்வம்..

Web Ads

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

‘பராசக்தி’ படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவிக்கையில், ‘ரஜினி நடிப்பில் காதல் படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில்,

‘ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் என்பது ஆசை. அதிலும் ரஜினி சாரை வைத்து ‘முதல் மரியாதை’ மாதிரி ஒரு காதல் படம் பண்ண வேண்டும் என்பது ஆசை. நான் அவருடைய தீவிர ரசிகை.

அதற்கான கதையைக் கூட எழுதி வைத்துள்ளேன். அக்கதையை இப்போது எடுத்து மீண்டும் முழுமையாக உருவாக்க வேண்டும். இது போக காதலை மையமாக கொண்ட ஒரு தெலுங்கு நாவலை படித்தேன். அந்த நாவலையும் படமாகப் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கமல் தயாரிப்பில் ‘தலைவர்-173’ படம் உருவாகவுள்ளது. இப்படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இச்சூழலில், சுதா கொங்கராவிடமும் சூப்பர் ஸ்டார் கதை கேட்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

sudha kongara wishes to direct rajinikanth in love story
sudha kongara wishes to direct rajinikanth in love story