நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ஆன புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் ஹன்சிகா மோட்வானி. இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் சின்ன குஷ்பூ என்ற பெயருடன் இடம் பிடித்த இவர் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மற்ற ஹீரோயின்களை போல் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

அதேபோல் தற்போது கவர்ச்சியான உடையில் கப்பலில் இருந்து எடுத்திருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டு இருக்கிறார். அதனை கண்ட ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.