
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்றாலும் சர்ச்சை நடிகராக வலம் வருபவர் சிம்பு. சமீப காலமாக பலரும் அவரை மோசமாக விமர்சித்து வந்தனர். ஆனால் இனி அதெல்லாம் முடியாது. ஏனென்றால் அடுத்தடுத்து மிக பெரிய இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து நடிக்க உள்ளார்.
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வரும் தெலுங்கு படத்தின் ரி-மேக்கில் தற்போது மஹத் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
மேலும் மஹத்துக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துக்கு கிடைத்துள்ள மிக பெரிய வாய்ப்பு இது என்பதால் மஹத்தும் மஹத் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.