STR Video

Unity For Delta : டெல்டா மக்களுக்கு உதவுவதற்காக சிம்பு வீடியோ ஒன்றின் மூலமாக சூப்பரான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களாக புதுக்கோட்டை, தஞ்சை, திருவாருர், நாகை உள்ளிட்ட பகுதிகள் கஜா புயல் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த புயலால் அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் திரையுலக பிரபலங்கள், இளைஞர்கள், தன்னார்வல தொண்டர்கள் என பலர் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிம்புவும் ஒரு சூப்பரான ஐடியாவை கொடுத்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மக்களுக்கு உதவ ஒரு அருமையான ஐடியா கொடுத்துள்ளார்.

அனைவரும் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நெட்ஒர்க்கின் மூலமாக ரூ 10 முதல் ரூ 100 வரை வழி வகை செய்ய வேண்டும். அதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்.

அதன் மூலம் மக்கள் அனுப்பிய தொகையை அரசுக்கு அளித்து அவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி வேண்டும். இந்த பணத்தால் செய்த செலவுகளையும் பட்டியலிட்டு அரசு வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

YouTube video