சென்னையில் நடைபெற்ற ஃபேன்ஸ் கிளப் மீட்டிங்கில் கலந்து கொண்ட சிம்புவின் வீடியோஸ் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒபெலி என் கிருஷ்ண இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளியான பத்து தல திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாக இருக்கும் “STR 48” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் இன்று நடைபெற்ற ஃபேன்ஸ் கிளப் மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அங்குள்ள ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட சிம்பு அவர்களுக்கு மட்டன் பிரியாணியை பரிமாறி விருந்தளித்து அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார். அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.